Kumari Palany & Co

பன்றிக்காய்ச்சல் பரவ என்ன காரணம்?

Posted on: 22/Sep/2010 2:43:54 AM
பன்றிக்காய்ச்சல் நோயை பரப்பும் ‘எச்1 என்1’ கிருமி காற்று மூலம் பரவுகிறது. ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் இருந்தால் அவருக்கு தும்மல் ஏற்படும்போது, அந்த கிருமி காற்றில் கலந்து மற்றவர்களையும் தாக்குகிறது. இதை தவிர்க்க நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மல் ஏற்படும்போது வாயையும், மூக்கையும் கைக்குட்டையால் பொத்திக்கொள்ள வேண்டும். தினசரி மூன்று முறை கைகழுவ வேண்டும், அடிக்கடி வெந்நீர் மூலம் வாயை கொப்பளிக்க வேண்டும்.

சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் கூறுகையில் "தலைவலி, காய்ச்சல் இருந்தால் அது ‘ஏ’ பிரிவாகும். அதனால் பயப்பட தேவையில்லை. தலைவலி, காய்ச்சல், தொண்டை வலி இருந்தால் சிகிச்சை பெற வேண்டும். இது ‘பி’ பிரிவாகும். தொடர் காய்ச்சல், கண் எரிச்சல், மூக்கில் சளி ஒழுகுதல், மூட்டு வலி இருந்தால் அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்வதுடன், சோதனை முடிவு வரும் வரை காத்திராமல் மருத்துவ சிகிச்சையை தொடர வேண்டும். இது ‘சி’ பிரிவாகும்’’ என்றார்.

நேற்று ஒரே நாளில் 1,859 பேர் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி மற்றும் மருந்து போட்டுக் கொண்டனர்.