Kumari Palany & Co

சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’!

Posted on: 23/Sep/2010 8:48:09 AM
சென்னையில் அவ்வப்போது தொடர்ச்சியாக மழை பெய்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக சென்னையில் அதிக வெயில் அடிக்கிறது. இதுபோன்ற திடீர் சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண் நோய் வேகமாக பரவுகிறது.  இதுகுறித்து அகர்வால் கண் மருத்துவமனையின் தலைவர் அமர் அகர்வால் கூறியதாவது" கண் சிவப்பாக இருப்பது, கண்ணில் இருந்து நீர் வடிவது ‘மெட்ராஸ் ஐ’ நோயின் அறிகுறியாகும். இந்நோய் வந்தால் மருத்துவர்களை அணுகி மருந்து வாங்கி போட்டால் இரண்டு, மூன்று நாட்களில் குணமாகி விடும்".