சென்னை அண்ணா சாலையில் இன்று காலை சைதாப்பேட்டையில் விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மாணவர்கள் சாலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தினால் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.