* சாப்பாடுகளுக்கு இடையே 3 மணிநேர இடைவெளி அவசியம். மூன்று பிரதான உணவுகளில் காலை உணவை முழுமையாக சாப்பிடுங்கள்.
* தினசரி 4 கப் காபி பருகலாம். ஆரோக்கியம் காக்கிறேன் பேர்வழியென்று காபியையே துறக்க வேண்டாம். அளவாக காப்பி பருகுவது என்பது சர்க்கரை நோய், உணவுக்குழாய் கேன்சர், ஈரல் நோயிகளைத் தடுக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
* தினந்தோறும் 5 வகை பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளமிடும். பழங்கள், காய்கறிகளில் உள்ள `ஆண்டி ஆக்ஸிடன்ட்கள்` கேன்சர், இருதய நோயிகளைத் தடுக்கும், நோயித் தொற்றுக்கு எதிராக இருக்கும். முன்றுக்கு sp; இரண்டு என்ற விகிதத்தில் காய்கறி, பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகள் அதிகமான நார்ச்சத்தையும், குறைவான சர்க்கரை சத்தையும் கொண்டுள்ளன.
* வயதுக்கு வந்தவர்கள் தினமும் 6 கிராமுக்கு மேல் உப்பு சேர்க்க வேண்டாம். சமையல் செய்யும்போது மட்டும் உப்பு சேர்க்கவேண்டும். பிரெட், பாக்கிங் உணவு வகைகளில் அதிக உப்பு மறைந்திருக்கிறது என்பதை உணருங்கள்.
* மொத்தம் 7 வகையான நிறங்களை கொண்ட காய்கறிகள், பழ&;ங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வண்ண காய்கறி, பழங்களும் வெவ்வேறு வகையான `ஆண்டி ஆக்ஸ்டன்ட்களை` கொண்டிருக்கிறன. எனவே எல்லா வண்ண காய்கறி, பழங்களும் உங்கள் உணவில் இருக்கட்டும்.
* தினமும் 8 கப் திரவம் குடிப்பது அவசியம். ஆனால் அது எல்லாம் தண்ணீராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. டீ, காபியும் இதில்
இடம்பெறலாம்.
* சராசரியாக பெண்கள் 9 வகை மாவுசத்து உணவுகளை (ஆண்களுக#3021;கு 11 வகை) சாப்பிடவேண்டும். ஒரு துண்டு ரொட்டி, முட்டை அளவு உருளைக் கிழங்கு, 28 கிராம் சாதம் போன்றவை இதில் அடங்கியிருக்கலாம்.
* சாதரணமாக குளிபானங்களில் 10 சதவீத சர்க்கரை உள்ளது. அதாவது ஒரு புட்டியில் 150 கலோரி இருக்கிறது. தொடர்ந்து குளிர்பானம் பருகுவது தொப்பைக்கு ஒரு முக்கிய காரணம். `டயட் ` குளிர்பானங்களுக்கு மாறலாம். ஜூஸுடன் அதிக தண்ணீர் சேர்த்துப் பருகலாம்.
* காலை உணவும், மதிய உணவும் 11 மணிய#3016; தாண்ட வேண்டாம். அதிகப் பசியின் போது நீங்கள் அதிகமாக சாப்பிடுவீர்கள்.
* பொதுவாக பெண்கள் உணவில் 12 மில்லி கிராம் இரும்புச் சத்தை எடுத்துக்கொள்கிறார்கள். இரும்புச்சத்து செறிந்த உணவுகளை உங்கள் உணவில் தினசரி சேர்த்துக் கொள்ளுங்கள்.
* சாதாரணமாக நாம் நம் ஒவ்வொரு கிலோ எடைக்கும் 26 கலோரி உணவு சாப்பிடலாம்.
* பனை அல்லது தெ&;ன்னை மரத்திலிருந்து கிடைக்கும் சுத்தமான பதநீர், கள் போன்றவற்றை தினமும் ஒரு கோப்பை அருந்தலாம்.
* நீங்கள் ஒருமுறை உணவை விழுங்கும்போது 15 முறை மெல்ல வேண்டும். நாம் சராசரியாக 7 முறைதான் உணவை மேல்கிறோம்.
* அங்களுக்கு தினசரி 16 சதவீதபுரதம் அவசியம். அதாவது 55 கிராம். பெண்களுக்கு என்றால் 45 கிராம்.
* நாம் அனைத்து விதமான சத்துக்களையும் பெற, வ்வொரு 3 நாட்களுக்கும் 17 வகையான உணவு வகைகளை உண்ண வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
* அனைவருக்கும் தினசரி 18 கிராம் நார்சத்து தேவை. அதற்கு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகிறவை நல்ல ஆதாரங்கள்.
*மொத்தம் 19 வகையான தாது உப்புகள், வைட்டமின்கள் அனைவருக்கும் அவசியத் தேவை என்பது மருத்துவர்களின் கருத்து.
* உங்கள் தினசரி&nbnbsp; உணவில், கொழுப்பு 20 கிராம்களுக்கு அதிகமாக இருக்கக்கூடாது. உங்கள் தினசரி கலோரிகளில் 35 சதவீதத்துக்குள் தான்
கொழுப்பின் பங்கு இருக்க வேண்டும்.
* பால் சார்ந்த உணவு வகைகளில் 21, ஒவ்வொரு வாரமும் உங்கள் உணவுப் பட்டியலில் இருப்பது கட்டாயம். தினசரி மூன்று வகையான பால்சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள்.