https://www.Livechennai.com

God will decide my political entry: Rajini

Posted on: 25/Oct/2010 2:54:06 AM
சனிக்கிழமை மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 40 வது ஆண்டு விழாவின் சிகரமாய் அமைந்தது அந்த நேர்காணல் நிகழ்ச்சி.

ஒவ்வொரு இயக்குநரும் தாங்கள் அறிமுகப்படுத்திய மாணவரிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும் என்பது கான்செப்ட். இந்த நிகழ்ச்சிக்கு மகுடம் வைத்தது போல அமைந்தது குரு பாலச்சந்தர் – மாணவர் ரஜினி நேர்காணல்.

நிகழ்ச்சியை கேபி இப்படி ஆரம்பித்தார்:

ரஜினி இன்றைக்கு உலக சினிமாவுக்குப் போய்விட்டார். இந்திய ச#3007;னிமாவின் உச்ச நடிகர். எவ்வளவோ வளர்ந்து விட்ட நிலையிலும் இன்றும் எனக்கு அவர் மாணவன்தான். என்னை எப்போதும் குருவாகவே மதிக்கிறார். அவரிடம் கேட்க ஏராளமான கேள்விகளை வைத்திருக்கிறேன். இந்த விழா மேடையில் கேட்டுவிடப் போகிறேன்… இந்த மேடையைப் பொறுத்தவரை என்னை குருன்னு நினைக்காம ஒரு பிரஸ்காரனா அவர் நெனச்சிக்க வேண்டியதுதான். அவருக்கு பதில் சொல்ல தயக்கமா இருக்கிற கேள்விகளுக்கு தாராளமா நோ கமெண்ட்ஸ்னு சொல்லிடலாம்…”

- கேபி இப்படிச் சொன்னதும் பதில் சொல்லத் தயாரானார் ரஜினி.

கேள்வி – பதில்:

கேபி: சிவாஜி ராவை நான்தான் நடிகனாக்கினேன். ஆனால் இப்போது, எந்திரனுக்குப் பிறகு, நினைத்துப் பார்க்க முடியாத பெரிய உயரத்தில் நீ இருக்கிறாய். அதுவும் மூன்று இமயமலை உயரம்… இப்போ மீண்டும் உன்னால் சிவாஜி ராவாக முடியுமா?

ரஜினி: நான் இன்னும் சிவாஜி ராவாகவே இருக்கிறதாலதான் ரஜினிகாந்த்தா இருக்க முடியுது. இந்த பேர், புகழெல்லாம் சிவாஜி ராவை பாதிக்கவில்லை!

கேபி: இன்னைக்கு நீ பெரிய நடிகன். உன்னால நினைச்சமாதிரி எங்கும் போக முடியாது. ஊரில் உள்ள சரவணபவனையெல்லாம் விலைக்கு வாங்கும் அளவுக்கு நீ இருந்தாலு#2990;், அதே ஹோட்டலில் போய் உன்னால உட்கார்ந்து சாப்பிட முடியாது.. நடிகரான பிறகு நிறைய இழந்துட்டோமேங்கிற வருத்தம் உண்டா?

ரஜினி: சாதாரண மனிதர்களைப் போல எனக்கும் ஓட்டல்களுக்கு சென்று சாப்பிட்டு வர ஆசை உண்டு. அந்த சந்தோஷத்தை இழந்துவிட்டேன். சில நேரங்கள்ல நிம்மதியை இழந்திருக்கிறேன். சூழ்நிலை கைதியாக இருக்க வேண்டியும் உள்ளது. இவைகளை தியாகம் செய்துதான் இந்தப் புகழை அடைந்திருக்கிறேன்.

‘மகாத்மாவின் துணிச்சல் எனக்கும் வரும்போது…‘


கேபி: உன்னோட வாழ்க்கை வரலாற񉯅றை சுயசரிதையாக எழுதலாமே…?

ரஜினி: சுயசரிதை எழுதினால் உண்மைகளை மறைக்காமல் அதில் குறிப்பிடவேண்டும். நான் உண்மைகளை அப்படியே எழுதினால் நிறைய பேர் மனசு கஷ்டப்படும். மகாத்மா காந்தியிடம் சுயசரிதை எழுதுவதற்கு தைரியம் இருந்தது. அந்தத் தைரியம் எனக்கும் வரும்போது எழுதுவேன்.

கேபி: உன்னை உச்சத்தில் வைத்துள்ள சினிமாவுக்கு என்ன செய்யப் போகிறாய்?

ரஜினி: நிச்சயம் நல்லது செய்வேன். தமிழர்களும், தமிழ் சினிமாவும் பெருமைப் படுகிற மாதிரி ஒண்ணை நிச்சயம் செய்வேன் (விசில் – கைதட்டல் பறக&#்கிறது).

கேபி: இன்னிக்கு நீதான் இந்தியாவின் உச்ச நட்சத்திரம். வட இந்திய மீடியாவே சொல்லுது. டிவியில பார்த்தேன். இந்த நிலையை தக்க வைக்க என்ன பண்ணப் போறே?

ரஜினி: இதை எதிர்ப்பார்த்து நான் எதையும் செய்யல. அதனால காப்பாத்திக்கவும் முயற்சி பண்ணலை. நான் என் வேலையை செய்துட்டு இருக்கேன். இப்போ இருக்கிற நிலை ஒரு எந்திரனால மட்டும் வந்ததில்லை. அதுக்கு முன்ன நான் பண்ண நிறைய படங்களும் காரணம். அதேநேரம், இந்த நிலையை எப்படி தக்க வச்சிக்கப் போறோம்ங்கிற பயம் இருக்கத்தான் செய்யுது.

கேபி: ச񉾟ல்வர்ஸ்டர் ஸ்டெலோன் மாதிரி ஒரு ஒன்மேன் ஆர்மி நீ. உன்னோட பன்முகப் பரிமாணத்தைக் காட்டும் அளவு படம் எடுக்க இனி யாராலும் முடியாதுன்னு நினைக்கிறேன். நீயே ஏன் ஒரு படத்தை இயக்கக் கூடாது?

ரஜினி: படங்களை டைரக்டு செய்யற ஐடியா எதுவுமில்லை. அது எனக்குத் தெரியாதது. நிறைய பொறுப்புமிக்கது.

கேபி: ஒருவேளை நீ படம் டைரக்ட் பண்ணா என்னை உதவியாளரா சேர்த்துக்குவியா?

ரஜினி: நிச்சயம் உங்களை உட்கார வச்சி வணங்கி, நீங்க சொல்ற வேலையை செய்வேன்.

கே பி: இதுவரை எத񉰩தனை படங்கள் நடிச்சிருப்பே?

ரஜினி: (சற்றும் யோசிக்காமல்) 154 படங்களில் நடித்துள்ளேன்.

கேபி: இந்தப் படங்களில் நாம நடிக்காம போயிட்டோமேன்னு நினைச்சுதுண்டா..?

ரஜினி: ஓரிரு படங்கள் உண்டு.

கேபி: என்னென்ன படங்கள்னு சொல்ல முடியுமா?

ரஜினி: இல்லே… இப்போ சொல்றது சரியா இருக்காது. நான் சொல்லவும் விரும்பல.

கேபி: வீரபாண்டிய கட்ட பொம்மன், எங்க வீட்டுப்பிள்ளை போன்ற பல படங்கள் இப்போதும் ; பேசப்படுகிறது. அதுபோல் 50 ஆண்டுகளை தாண்டியும் நிற்கிற உன்னோட படங்கள்ன்னு எதைச் சொல்லுவே?

ரஜினி: ராகவேந்திரா, பாட்ஷா, எந்திரன்.

கேபி: நீ மிகச் சிறந்த நடிகன். ஆனா தேசிய விருது கிடைக்கலேன்னு ரசிகர்களைப் போலவே எங்களுக்கும் ஏக்கம் உண்டு. எப்போது தேசிய விருது பெறுவாய்?

ரஜினி: அது டைரக்டர்ஸ் கையில இருக்கு.. நீங்க பண்ணினா கிடைக்கலாம்!

கேபி: அது இனிமே முடியாதுப்பா… உன்னை வெச்சு என்னால படம் எடுக்க முடியாது.நீ எங்கேயோ போயிட்ட, உன் இமேஜுக்கு நான் ப񇡯ம் பண்ண முடியாது. அது எனக்கு தெரியாது. ஆனா நாடகங்களில் நடிக்கணும் என்ற ஆர்வம் உனக்கு உண்டு. நீயே பல முறை சொல்லியிருக்கே. இப்போது நாடகங்கள் போட்டால் நடிப்பியா?


ரஜினி: கண்டிப்பா நடிப்பேன்.

கேபி: மேஜர் சந்திரகாந்த் நாடகத்தை ஏப்ரல் 15-ந் தேதி போடப் போறேன். இரண்டு நாள் உன்னோட கால்ஷீட் வேணும்… மேஜரா நடிப்பியா?

ரஜினி: நீங்க சொன்னா, சரி.

கேபி: கமல் என்னை நடிக்க வைச்சு டைரக்ட் பண்றேன்னு சொல்றார்.. ஆனா நீ ஏன் அது மாதிரி சொல்ல மாட்டேன5;்ற..?

ரஜினி: ஐடியா இருந்தா சொல்றேன்..

சிகரெட் பிடிப்பதை குறைத்துவிட்டேன்!

கேபி: சினிமாவுக்கு வந்த புதிதில் சிகரெட்டை தூக்கி போட்டு ஸ்டைல் காட்டினே. சிகரெட்டும் அதிகமா பிடிப்பே. இப்போ குறைச்சிட்டியா?

ரஜினி: ஆமா, சிகரெட் பிடிப்பதை இப்போ குறைச்சிட்டேன்.

கேபி: நீ விட்டுட்டா நாட்ல நிறைய பேர் விட்டுடுவாங்க. உனக்கே தெரியும் நான் பாக்கெட், பாக்கெட்டா ஒரு நாளைக்கு எத்தனை ஊதியிருக்கேன்னு. ஆனா நானும் ஒரு நாள் ; விட்டேன். நீயும் விட்டுடு.. சரியா.?

ரஜினி: சரி.. முயற்சி பண்றேன் (அப்போது இடையில் குறுக்கிட்ட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், “அவரை சிகரெட் பிடிக்க வெச்சதே நீங்கதான்” என்று கலாய்க்க, கேபியோ, ‘நான் அவனை சிகரெட்டை தூக்கிப் போட்டு ஸ்டைல்தான் பண்ணச் சொன்னேன், புகைய விடச் சொல்லலய்யா’, என்றார்!)

கேபி: சரி.. நான் இயக்கிய படங்களில் உனக்குப் பிடிச்ச படங்கள் என்னென்ன?

ரஜினி: 2 படங்கள் ரொம்ப பிடிக்கும். ஒண்ணு, அவள் ஒரு தொடர்கதை. இன்னொன்னு அரங்கேற்றம்.


கேபி: எந்திரன் படத்தை 2 தடவை பார்த்தேன். ரொம்ப அருமையா பண்ணியிருந்தே… ஹேட்ஸ் ஆஃப். என் வாழ்க்கைல சந்திரலேகாவுக்கு அப்புறம் ரெண்டாவது முறை பார்த்த படம் எந்திரன்தான். உனக்காகத்தான்…

ரஜினி: உங்க பெருந்தன்மை சார்…

கேபி: சரி, நீ என் படத்தை எப்பவாவது 2 தடவை பார்த்திருக்கியா?

ரஜினி: நிறைய பார்த்திருக்கேன்.. சர்வர் சுந்தரம், அபூர்வ ராகங்கள், அவர்கள், அரங்கேற்றம்… அவர்கள் படத்தை மட்டும் 8 முறை பார்த்தேன். அரங்கேற்றத்தை 12 முறை பார்த்தேன். (நம்ப முடியாமல் நிஜமாகவா என்று கேட񉰩கிறார் கேபி)

கேபி: எந்திரன் மாதிரி இன்னொரு படம் எடுக்க முடியுமா தெரியல. அருமையை பண்ணியிருந்தே. உன்னை சரியா பயன்படுத்தியிருக்கார் ஷங்கர். எந்திரன் உன் அல்டிமேட் படமா..?

ரஜினி: இல்லை (குட்… என்று கூறி ரஜினியைப் பாராட்டுகிறார் கேபி)!

கேபி: எந்திரன் படத்தை முடிச்சிட்ட? மகள்களுக்கும் கல்யாணத்தை முடிச்சிட்டே. அடுத்து என்ன?

ரஜினி: எதுவும் இல்லை. ஆனா அடுத்த படம் ஒத்துக்கிட்டா கவலை வந்துடும்!

கேபி: சரி, இப்போ என&;்கிட்ட என்ன எதிர்பார்க்குற?

கேபி: இந்தக் கேள்வி பதில் எப்போ முடியும்!

கேபி: ரஜினிகாந்த்ன்னு உனக்கு என்னிக்கு பேர் வைச்சேன்னு ஞாபகம் இருக்கா..?

ரஜினி: ஹோலிப் பண்டிகை அன்னிக்கு..

கேபி: அப்போவெல்லாம் ஒவ்வொரு வருஷமும் ஹோலிப் பண்டிகைக்கும் இந்தப் பேர் வைச்சதை ஞாபகம் வைச்சிருந்து என்னைப் பார்க்க வருவே.. கொஞ்ச வருஷம் வந்தே… அப்புறம் வர்றதில்லையே!

ரஜினி: தப்புதான்… இனிமேல் கண்டிப்பா தொடர்ந்து வருவேன்.

கேபி: என் படங்கள்ல நடிக்கும்போது ஏன்டா இவங்கிட்ட மாட்டிக்கிட்டோம்னு நினைச்சதுண்டா?

ரஜினி: நிறையவாட்டி…

கேபி: நிறையவாட்டியா.. நான் உன்னைவெச்சு நாலஞ்சு படம்தான் பண்ணிருப்பேன். ஆனால தில்லுமுல்லு படத்தை என்னால மறக்கமுடியாது. இந்தப் படத்துல நடிக்கவே மாட்டேன்னுட்ட… மீசைய எடுக்கணுமேன்னு தயக்கம் உனக்கு. ஆனால் நான்தான் உனக்கு காமெடி நல்லா வரும்னு சொன்னேன்…

ரஜினி: ஆமா.. காமெடி நமக்கு சரிப்பட்டு வருமான்னு யோசிச்சேன்..

கேபி: அப்புறம் அவர்கள் ஷூட்டிங்லே உன்னைத் திட்டிட்டு செட்டிலிருந்து நான் வெளியேறினேனே…

ரஜினி: ஆமா… நல்லா ஞாபகம் இருக்கு.

கேபி: அதை பின்னால் நினைச்சி ரொம்ப வருத்தப்பட்டிருக்கேன். உன்னோட வளர்ச்சியின் ஒவ்வொரு ஸ்டேஜ்லயும் அதை நினைச்சுப் பார்த்து என்னை நானே திட்டிக்குவேன். சரி… பஸ் கண்டக்டரா இருக்கும்போது யாரையாவது லவ் பண்ணியிருக்கியா..?

ரஜினி: ஆமா…

கேபி: என்கிட்ட மட்டும் சொல்லு.. என்ன?

ரஜி񈿩ி: அப்புறமா சொல்றேன்!

கேபி: உனக்குப் பிடித்த புத்தகம் எது?

ரஜினி: பொன்னியின் செல்வன்.

கேபி: நீ இப்பவும் நினைச்சுப் பார்த்து சந்தோஷப்படுற நாள்..?

ரஜினி: கே.பி. ஸார் என்னை அவர் படத்துல புக் செஞ்ச நாள்..

கேபி: நீ இப்பவும் நினைச்சு துக்கப்படுற நாள்..?

ரஜினி: எங்கப்பா செத்த நாள்.

கேபி: நீ இப்பவும் மறக்காம வைச்சிருக்கிறது..?

ரஜினி: முள்ளும் மலரும் படம் பார்த்துட்டு நீங்க எனக்கு எழுதின லெட்டர்.

கேபி: உனக்குப் பிடிச்ச சூப்பர் ஸ்டார் -அவர் எந்தத் துறையா வேண்டுமானாலும் இருக்கலாம்- யாரு?

ரஜினி: லீ குவான் யூ. நவீன சிங்கப்பூரை உருவாக்கிய தலைவர்.

கேபி: வாழ்க்கையில யாரையாவது பார்த்து பொறாமைப் பட்டிருக்கியா?

பதில்: இமயமலையில் உள்ள துறவிகளைப் பார்த்து ரொம்ப பொறாமைப் பட்டிருக்கிறேன்.

கேபி: உனக்குப் பிடிச்ச இயக்குனர2;் யார்… தயங்காம சொல்லு!

ரஜினி: மகேந்திரன்.

கேபி: நீ விரும்பிச் சாப்பிடற உணவு எது?

ரஜினி: சிக்கன்.

கேபி: யார்கிட்ட சொல்றான் பாருங்க… இமயமலையெல்லாம் போறானே, ஏதாவது வெஜ் அயிட்டம் சொன்னான்னா நான் அதை பாலோ பண்ணலாம்னு நினைச்சேன்! சரி, வாழ்க்கையில் நீ நட்புக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பது எல்லோருக்கும் தெரியும். உனக்கு நெருங்கிய நண்பர் யார்?

ரஜினி: ராஜ் பகதூர்.

கேபி: என்#2965;ிட்டே உனக்குப் பிடிக்காத விஷயம் எது?

ரஜினி: உங்க கோபம், அதைக் குறைச்சிக்கணும்!

கேபி: எல்லோரும் கேட்கணும்னு நினைக்கிற கேள்வி இது. நீ அரசியலுக்கு வருவியா மாட்டியா, என்கிட்ட மட்டுமாவது சொல்லு?

ரஜினி: அது அந்த ஆண்டவன் கையில் இருக்கு (மேலே கையைத் தூக்கி காட்டுகிறார்)!

கேபி: நீ எதாவது சொல்லனும்னு நினைக்கிறியா?

ரஜினி: நோ கமெண்ட்ஸ்!