சென்னை அண்ணா மேம்பாலம் அருகே டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா என்ற பெயரில் பிரமாண்டமான தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு ரூ.8 கோடி செலவில் இந்த செம்மொழி பூங்காவை அமைத்துள்ளது. 700 வகையான தாவரங்களைக் கொண்டு செம்மொழி பூங்கா வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. செம்மொழி பூங்காவை முதல்வர் கருணாநிதி நேற்று (புதன்கிழமை) மாலை திறந்து வைத்தார் . துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திறப்புவிழா நிகழ்ச்சியில் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.