தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயம் செய்த கட்டணம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இக்கட்டணத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்குகளை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தி முடிக்குமாறும் அது உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு இந்த ஆண்டு முதலே புதிய கட்டண விகிதத்தை அமல்படுத்துமாறும் உத்தரவிட்டது.ஆனால் இதை தனியார் பள்ளிகள் ஏற்கவில்லை. மாறாக கோவிந்தராஜன் கமிட்டி கட்டண விகிதத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அ#2980;ை விசாரித்த நீதிபதி வாசுகி, கட்டண விகிதத்திற்கு இடைக்காலத் தடை விதித்தார்.
இதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வில்சன் அப்பீல் செய்தார். இதை விசாரித்த தலைமை நீதிபதி இக்ரபால் தலைமையிலான பெஞ்ச் இடைக்காலத் தடையை ரத்து செய்தது. மேலும், நடப்பு ஆண்டு முதலே கல்விக் கட்டண நிர்ணயத்தை அமல்படுத்தவும் உத்தரவிட்டது. மேலும் தனியார் பள்ளிகளின் சங்கங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது.