இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே 3 விருதுகளை வாங்கிக் கொடுத்துள்ளார் தமிழ் இயக்குனர் பாண்டிராஜ்.பசங்க படத்திற்கு சிறந்த தமிழ்ப் படம், சிறந்த வசனம், சிறந்த குழந்தை நட்சத்திரம் என மூன்று தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. இதுகுறித்து பாண்டிராஜ் கூறுகையில்,
"தேசிய விருது கிடைத்தது, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பசங்க படத்துக்கு நிச்சயமாக தேசிய விருது கிடைக்கும் என்று முன்பே எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. அந்த படத்துக்கு சிறப்பாக வசனம் எழுதியதற்காக விருது கிடைத்து இ1;ருப்பது, உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது".
இப்படத்திற்கு வசனம் எழுதுவதற்கு ரொம்ப நேரம் செலவிட்டேன். குறிப்பாக, ஜெயப்பிரகாஷ் குளத்தங்கரையில் உட்கார்ந்து வசனம் பேசுகிற காட்சிக்கு வசனம் எழுத அதிக நேரமானது. யோசித்து யோசித்து எழுதினேன். அந்த உழைப்புக்கு பலன் கிடைத்திருப்பது, சந்தோஷமாக இருக்கிறது என்றார் பாண்டிராஜ்.
இப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் சசிக்குமார் கூறுகையில்,
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த படத்துக்கு நிறைய விருதுகள் கிடைக்கும் என்று நண்பர்கள் கூறினார்கள். அது பலித்துள்ளு. இயக்குநர் பாண்டிராஜ், நடித்த நடிகர், நடிகைகள் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். இத்தனை பேரும் சேர்ந்துதான் இந்த மூன்று விருதுகளுக்கு்க காரணமாக இருந்தார்கள் என்றார்.