தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், வரும் மார்ச் 2ம் தேதி துவங்குகிறன. பொதுத் தேர்வு பணிகளை அரசு தேர்வுத் துறை துவங்கியுள்ளது. பிளஸ் 2 தேர்வுகள் தொடர்பான தற்காலிக தேர்வு அட்டவணை தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது. மார்ச் 1ம் தேதி செவ்வாய்க் கிழமையாக உள்ளதால், மார்ச் 2ம் தேதி தேர்வுகள் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது. மார்ச் 20ம் தேதிக்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. இந்தாண்டு, ஏழு லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுவார்கள் என தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.