திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். அதன்படி இம்மாத பவுர்ணமி வரும் 20ம் தேதி பிற்பகல் 3.10 மணிக்கு தொடங்கி, மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.37 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வரலாம். இதுவே திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரமாகும்.