வங்கக் கடலில் இலங்கை அருகே காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளதையடுத்து கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதே போல காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் கன மழை பெய்யலாம் என்றும், மற்ற பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது