Kumari Palany & Co

திருத்தணி முருகன் கோயில் தங்க விமான கும்பாபிஷேகம்

Posted on: 08/Feb/2011 2:05:36 AM
திருத்தணி முருகன் கோயிலில் ரூ.25 கோடி செலவில் உருவாக்கப்பட்ட தங்க விமானத்தின் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர். ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோயிலில், தங்க விமானம் அமைக்க அரசு உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.25 கோடி செலவில் மூலவர் கருவறை மேல் தங்க விமானம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது.  ஜனவரி 3-ம் தேதி தங்க விமானத்தில் பதிக்கப்படும் தங்கத் தகடுகளை உருவாக்கும் பணி தொடங்கியது. பணிகள񉰩 முழுவதும் துரித வேகத்தில் நடைபெற்று முடிந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு அறநிலையத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து கும்பாபிஷேகத்தை தொடங்கி வைத்தார். பின்னர், ரிஷி கோபுரம், மூலவர் தங்க விமானம் மற்ற விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டன.